பல நாட்களாக, ஏன் பல மாதங்களாக எனக்கு தமிழில் blog செய்யவேண்டும் என்று விருப்பம். ஆனால் SCIMஐ எனது laptopஇல் install செய்து, அதை செரிவர configure செய்ய இருந்த சோம்பேரித்தனத்தினாலே அந்த விருப்பம் நிறைவேராமல் இருந்தது. மற்றும் பல ஆண்டுகளாக தமிழில் எழுதாததால் என் தமிழ் அறிவும் குன்றி விட்டதோ என்ற அச்சமும் உடன் சேர்ந்து கொண்டது. இருப்பினும் இன்று எதோ டிடிரென்று தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கவே scimஐ நிறுவ முற்பட்டபோது தான் அறிந்தேன் அதை நிறுவும் முறையானது மிகவும் எளிதாக்கப்பட்டு உள்ளதை. அதன் எதிரொளியாகத்தான் இதோ என்னை தமிழில் எழுத காண்கிறீர்கள்.
இம்முயற்ச்சியை இதனோடு மட்டும் நிருத்திக்கொள்ளமல் மேன்மேலும் எழுத வேண்டும் என்று விரும்பி அதற்கான முயற்ச்சிகளை எடுக்க முனைவேனாக. தமிழில் எழுதி பல ஆண்டுகல் ஆவதால் இங்கும்அங்கும்ஏற்படும் பிழைகளை பொருத்து, அவற்றினை திருத்துமாறு வேண்டுகிறேன். இனி அவ்வப்பொழுது இந்த blogஇலேயே இந்த blogஇல் நான் எழுதிவரும் தலைப்புகளிலெயே தமிழில் எழுதவிருக்கிறேன். எனினும் முழுக்க முழுக்க சுத்த தமிழில் எழுதாமல், அதாவது சில terminologyகளை ஆங்கிலத்திலேயே எழுத முடிவு செய்த்துள்ளேன். உங்கள் உதவியும் ஊக்கமும் விமர்சணங்களும் எனக்கு துனைநிற்க்க வேண்டும்.
இப்படிக்கு,
தொழில்நுட்பபித்தன் (technofreak)




